கருணாநிதி இல்லாத அறிவாலயமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை... நா தழுதழுத்த ஸ்டாலின்!
Recommended Video

சென்னை: கருணாநிதி இல்லாத அண்ணா அறிவாலயத்தையும் கோபாலபுரத்தையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று ஸ்டாலின் நா தழுதழுக்க பேசினார்.
கருணாநிதியுடன் தனது 14 வயது முதல் அரசியலில் உடனிருந்தவர் ஸ்டாலின். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக தலைவர் தலைவர் என்றே அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி அவர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
அப்போது அப்பா என்று ஒரு முறை அழைத்துக் கொள்ளட்டுமா என்று கடிதம் எழுதியிருந்தார். இது பலருக்கு உருக்கத்தை தந்தது.

இடம் இல்லை
கருணாநிதியின் ஆசை தனது இறுதி காலத்துக்கு பின் அண்ணாவின் அருகில் தனக்கொரு இடம் வேண்டும் என்பதுதான். இதை தமிழக அரசிடம் தெரிவித்தும் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கினர். இதை திமுக நீதிமன்றத்தில் சந்தித்தது. இந்த வழக்கிலும் கருணாநிதி வெற்றி பெற்றார்.

ஆசை நிறைவேறுமா
தன் தந்தையின் ஆசையை தமிழக அரசிடம் சொல்லியும் இடம் கொடுக்க மறுத்ததால் அவரது ஆசையை நிறைவேற்றாமல் போய்விடுமோ என்று மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டார். இந்த தீர்ப்பு வந்ததுதான் தாமதம், உடனே மனம் உடைந்து கண்ணீர் விட்டார்.

கெஞ்சினேன்
கருணாநிதி இறப்புக்கு பிறகு நடந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், என் தந்தைக்கு மெரினாவில் இடம் கொடுக்குமாறு கவுரவம் பார்க்காமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை பற்றி கெஞ்சினேன் என்று கூறிய போது ஸ்டாலின் அழுதுவிட்டார்.

கண்ணீர் விட்ட ஸ்டாலின்
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்கவில்லை என்ற விவகாரம் கொடுத்து கனிமொழி நேற்று நடந்த பொதுக்குழுவில் பேசினார். அப்போது உயர்நீதிமன்றம் கருணாநிதிக்கு இடம் கொடுக்க உத்தரவிட்ட போது ஸ்டாலின் அழுததை சுட்டிக் காட்டிய போதும் ஸ்டாலினுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

நா தழுதழுத்த
இதையடுத்து பொதுக்குழுவில் ஸ்டாலின் ஏற்புரை வழங்கினார். அப்போது ஸ்டாலின் கூறுகையில், கருணாநிதி இல்லாத எங்கள் கோபாலபுரம் வீடு இப்போது பொலிவிழந்து காணப்படுகிறது. அவர் இல்லாத அண்ணா அறிவாலயத்தை என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று ஸ்டாலின் கூறியபோது துக்கத்தால் அவரது நா தழுதழுத்தது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications