சித்திரை வீதியில் நடந்து வந்தா மு.க.ஸ்டாலின் என்று தெரிஞ்சுக்கோ...!
மதுரை: மதுரை வந்த திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் காலையில் வாக்கிங் போய் மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நேற்று காலையில் மதுரை சித்திரை வீதியில் மு.க.ஸ்டாலின் நடந்து வந்ததைப் பார்த்த மதுரை மக்கள் ஆச்சரியத்துடன் அவருடன் கை குலுக்கியும், செல்பி எடுத்தும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
வெளியூர்களுக்குப் போனால் அங்கு மக்களோடு மக்களாக வாக்கிங் போவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார் ஸ்டாலின். அந்த வகையில் மதுரை வந்த அவர் நேற்று அங்கு வாக்கிங் போனார்.

தேவர் ஜெயந்தி - தேர்தல் பிரசாரம்
தேவர் ஜெயந்தி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பிரசாரம் ஆகியவற்றை முன்னிட்டு மதுரை வந்திருந்தார் ஸ்டாலின். நேற்று காலை அவர் மதுரை சித்திரை வீதிகளில் திடீரன காலையில் வாக்கிங்கில் இறங்கினார்.

திமுக கலர் டிரஸ்ஸில்
திமுகவின் கருப்பு சிவப்பு நிற டிரஸ்ஸில் காலை ஆறரை மணிக்கு வாக்கிங்கை ஆரம்பித்தார் ஸ்டாலின். சாலையைரோமாக வாக்கிங் போய்க் கொண்டிருந்த பலரும் திடீரென ஸ்டாலின் நடந்துவருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

மொத்தம் 3 ரவுண்டு
சித்திர வீதிகளை மூன்று முறை சுற்றி வந்த ஸ்டாலினுடன் திமுக நி்ர்வாகிகளும் நடந்து வந்தனர். ஸ்டாலினிடம் பொதுமக்கள் பலரும் கை குலுக்கினர். செல்பி எடுத்துக் கொண்டனர்.

வாக்கிங் வித் டாக்கிங்
வழக்கம் போல வாக்கிங்காக இல்லாமல் மக்களுடன் பேசியபடியும், கும்பிட்டபடியும், புகைப்படம் எடுத்தபடியும் சித்திரை வீதிகளை வலம் வந்தார் ஸ்டாலின்.

சூடா காபி
பின்னர் கோபு அய்யங்கார் ஹோட்டலுக்குப் போய் சூப்பர் காபியை ருசி பார்த்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஸ்டாலினே டீ வாங்கிக் கொடுத்தார். பில்லையும் அவர் கட்டினார்.

மினி சித்திரைத் திருவிழா!
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ என்று சினிமா பாட்டு உண்டு.. அதே சித்திரை வீதியில் நடந்து வந்து ஸ்டாலின் ஒரு மினி திருவிழா உற்சாகத்தை அரங்கேற்றி விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications