சென்னை ஐஐடி மாணவரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்
மாட்டிறைச்சி விழா நடத்தியதாக தாக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவர் சூரஜை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி. மாணவர் சூரஜை மருத்துவமனையில் நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஆய்வு மாணவர் சூரஜ் ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து சூரஜை சக மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இத் தாக்குதலில் அவரின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்போது வானகரம் அப்பல்லே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவரை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் திமுக எம்.பி., திருச்சி சிவா உடனிருந்தார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், மாணவர் சூரஜிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன். மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து கல்லூரி நிர்வாகமும், சென்னை மாநகர காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications