இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்துள்ளது - ஸ்டாலின் தகவல்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 22-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

முதல் நாளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 135 பேரிடம் மட்டும் மதியம் வரை நேர்காணல் நடத்தப்பட்டது.
பின்னர் மாலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த 204 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது. அத்துடன் முதல் நாள் நேர்காணல் முடித்து கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களுக்கான நேர்காணல் அடுத்தடுத்த நாள்கள் நடைபெற்றன.
இந்நிலையில் 5-வது நாள் நேர்காணல் முடிந்த பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊர் ஊராகச்சென்று மக்களின் கருத்துக்களை பெற்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்பட்ட பின்னர் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.
மேலும், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும். இதுவரை 100 தொகுதிகளில் 1,298 பேரிடம் நேர்காணல் நடை பெற்றுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications