அன்புமணியைத் தொடர்ந்து ராமதாஸையும் சந்தித்தார் ஸ்டாலின்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து அருள்நிதியின் திருமண அழைப்பிதழை அளித்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க. தமிழரசுவின் மகன் அருள்நிதி திருமணம் வரும் ஜூன் மாதம் நடக்கிறது. இதையொட்டி மு.க. ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார்.
விஜயகாந்த், இளங்கோவன், ஜி.கே.வாசன், வைகோ, அன்புமணி ஆகியோரை நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த ஸ்டாலின், இன்று சுப்பிரமணியன் சாமியையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து திண்டிவனம் அருகே தைலாபுரம் சென்ற ஸ்டாலின், அங்கு பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ‘ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு திமுக நிலையை கட்சித் தலைவர் கலைஞர் அறிவிப்பார். அரசியலுக்கு அப்பாற்பட்டு குடும்ப நிகழ்ச்சிக்காக ராமதாசை சந்தித்தேன்' என்றார்.
அன்புமணி ராமதாஸிற்கும், ஸ்டாலினுக்கும் இடையே அறிக்கை போர் நடந்து வரும் சூழலில், நேற்று அன்புமணியையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் ஸ்டாலின். இந்நிலையில், இன்று ராமதாஸை அவர் சந்தித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications