'கேப்டன்' விஜயகாந்தை சந்தித்த 'தளபதி' ஸ்டாலின்… அரசியல் பேசவில்லையாம்!
சென்னை: திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.தமிழரசின் மகனும், நடிகருமான அருள்நிதி திருமண அழைப்பிதழை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு தேர்தல் கூட்டணிக்கு போடும் அச்சாரம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாடு சென்றிருந்த விஜயகாந்த் ஞாயிறன்று சென்னை திரும்பினார். விரைவில் விஜயகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல விஜயகாந்த்தை இன்று மு.க.ஸ்டாலின் தேமுதிக அலுவலகத்திற்கு சென்று சந்தித்து பேசினார். தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிழை விஜயகாந்திடம் கொடுத்த ஸ்டாலின், திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்ததோடு, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல. திருமண அழைப்பிதழ் கொடுக்க மட்டுமே ஸ்டாலின் வந்து சென்றதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications