பெருந்தன்மையானவர் ஜெயலலிதா... மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதல்வர் ஜெயலலிதா மிகவும் பெருந்தன்மையானவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பெருந்தன்மையான எண்ணம் கொண்டவர் என்று திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் சன் செய்திகளுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், சுனாமி வந்த நேரத்தில் தான் வசனம் எழுதிய திரைப்படங்கள் மூலமாக வந்த நிதியை முதல்வரிடம் கொடுக்கச் சொன்னார் திமுக தலைவர் கருணாநிதி.

நானும் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்தேன். அப்போது என்னிடம் எனது நலன் குறித்து விசாரித்தார் ஜெயலலிதா. கருணாநிதி குறித்தும் நலன் விசாரித்தார். சில அரசியல் பிரச்சினைகள் குறித்துக் கூட கேட்டார். அது என்னைக் கவர்ந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை அழைத்திருந்தார். அப்போது என்னை 11வது வரிசையில் உட்கார வைத்து விட்டனர். இது சில நாட்களுக்குப் பிரச்சினையாக நீடித்தது.
இதை அறிந்த ஜெயலலிதா, வருத்தப்படுகிறேன். இது நடந்திருக்கக் கூடாது. எனது கவனத்திற்கு வந்திருந்தால் இதை சரி செய்திருப்பேன். நடந்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியது அவரது பெருந்தன்மையைக் காட்டியது. அவரது உணர்வை, எண்ணங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications