சைக்கிள் கேப்பில் ஆட்சிக்கு வர நினைக்கிறார்.. ஸ்டாலின் மீது பாயும் ஜெயக்குமார்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சைக்கிள் கேப்பில் ஆட்சிக்கு வரலாம் என நினைப்பதாக ஜெயக்குமார் சாடியுள்ளார்.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சைக்கிள் கேப்பில் ஆட்சிக்கு வரலாம் என நினைப்பதாக ஜெயக்குமார் சாடியுள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் அல்ல அதற்கு மேலும் நீடிக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சைக்கிள் கேப்பில் ஆட்சிக்கு வர நினைப்பதாக குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதாவின் ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் அல்ல அதற்கு பின்னும் நீடிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் ஈபிஎஸ் அணியினருடன் சேர வேண்டாம் என ஆதரவாளர்கள் கூறுவதாக செம்மலை கூறியது, அவரது தனிப்பட்ட கருத்தா அல்லது ஓபிஎஸ் அணியினருடையதா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காலம் கனிந்து வந்துவிட்ட பிறகும் ஓபிஸ் அணியினர் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முன்னதாக நேற்று சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் அந்த அணியின் எம்எல்ஏ செம்மலை நடத்திய கூட்டத்தில் ஈபிஎஸ் அணியினருடன் சேர வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு அணியினரும் மாறி மாறி இவ்வாறு பேசி வருவதால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications