சுதந்திரமாக சுற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி
சுதந்திரமாக சுற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்று சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை : நீதிமன்றம் கைது செய்ய தடை இல்லை என்று தெரிவித்தும், இன்னமும் எஸ்.வி சேகரை தமிழக காவல்துறை கைது செய்யாதது ஏன் என்று சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து பரப்பிய எஸ்.வி சேகர் மீது பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், எஸ்.வி சேகரை கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், இதுவரை எஸ்.வி சேகர் கைது செய்யப்படவில்லை .
போலீஸாரின் துணையோடு எஸ்.வி சேகர் வலம் வருவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , இன்னமும் ஏன் எஸ்.வி சேகர் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது இந்த விவகாரத்தை பேச மறுப்பு தெரிவித்த சபாநாயகர் தனபால், எஸ்.வி சேகர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், ஜூன் 20 வரை அதைப் பற்றி பேசக்கூடாது என்று தெரிவித்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஸ்டாலினை பேச விடாததாலும் சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications