ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து !
சென்னை: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழத்து அறிக்கையில், பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் நாளை முதல் 21-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் சார்பில் 121 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியுற்றேன்.

அவர்களில் தமிழகத்திலிருந்து இந்தியாவின் பெருமையை நிலைநாட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் 6 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற செய்தியால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். குறிப்பாக முதல் முறையாக இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது நம் நாட்டிற்கு கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.
தமிழக வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆடவர் பிரிவில் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, சென்னை அம்பத்தூரில் உள்ள மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய மோகன்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அதே போல் 2014 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் இம்முறை ஆடவருக்கான 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்கிறார். 20 கிலோ மீட்டர் வேகநடை போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் கணபதி கலந்து கொள்கிறார். டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சரத் கமல் பங்கேற்கிறார்.
இம்முறை இந்திய அணிக்காக பிரேசில் நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பது தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களும்- அதில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களும் அமோக வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களுடன் திரும்ப வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் இது போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் மேலும் அதிகமான எண்ணிக்கையில் பங்கேற்பதற்கும், அதற்குரிய பயிற்சிகளை அளிப்பதற்கும் இனி வரும் காலங்களில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications