ஓட்டுக்கு பணம் கொடுத்து விலை பேசுகிறார்கள் - ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆர்.கே. நகரில் வாக்காளர்களை ஒரு ஓட்டுக்கு ரூ. 4000 கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர் என்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வாக்குகளை முதல்வர், அமைச்சர்கள் விலை பேசியுள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பொல்லாத ஆட்சி நடைபெறுவதாகவும், அரசு கஜானாவை காலி செய்த இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு வாக்களிக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

ஆவணங்கள் வெளியானது
விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், எந்த பணம் அமைச்சருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்ற விவரம் அந்த ஆவணங்களில் உள்ளதை ஸ்டாலின் சுட்டிக் காட்டி பேசினார். வாக்காளர்களுக்கு தர மொத்தம் ரூ.89 கோடி ஒதுக்கியதற்கான ஆதாரத்தை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பினாமி ஆட்சி
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதி மோசமான நிலையில் உள்ளதாகவும், அடிப்படை பிரச்சினைகளை தீர்த்தவைக்க சட்டமன்றத்தினல் குரல் கொடுப்போம் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கிய தினகரன் போட்டியிடுவதாகவும், ஜெயலலிதா உருவத்தை சவப்பெட்டியில் வைத்து ஓ.பி.எஸ். அணி பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பதவி நீக்கம் செய்க
பணம், பிணம் வைத்து அதிமுக இரு அணிகள் பிரச்சாரம் செய்து வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பொல்லாத ஆட்சி நடைபெறுவதாக கூறிய ஸ்டாலின், முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்களை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

பதவி விலக வேண்டும்
ஒவ்வொரு தேர்தலின் போதும் இதே போலத்தான் அதிமுகவினர் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்றும் கூறிய ஸ்டாலின் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை பதவி விலகவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications