கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்... மணக்காது - யாரை சொல்கிறார் ஸ்டாலின்
தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.
பருவநிலை மாறும் போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோடி தொண்டர்களின் குரல் ஒலிக்கும் கள ஆய்வு என திமுக நிர்வாகிகளை தொடர்ந்து சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக பாசமான கட்சி
திமுக குடும்ப கட்சி தான்.. பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சி. குடும்பக் கட்சி என்று சொல்ல காரணம் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.

தொண்டர்கள் வேலி
திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதாரப்பயிரை பாதுக்காக்கும் வேலியாக கோடித் தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.

கவர்ச்சிப் பூக்கள்
தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. பருவநிலை மாறும் போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர்.

திமுக வெற்றி பெற நடவடிக்கை
திமுக நிர்வாகிகள் உடனான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும் தொய்வின்றித் தொடர்கிறது என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஸ்டாலின், இதுவரை 22 மாநகர மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகளை அறிவாலயத்தில் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் அரசியல் பயணம்
நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்து பேசிய உடன் இதே போல ஒரு அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். இதே போல நடிகர் கமல்ஹாசன் தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசிய நிலையில் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications