ஓரடகத்தில் உறுதி முழக்கப் பேரணி: திமுகவினர் அணி திரண்டு வர ஸ்டாலின் அழைப்பு
சென்னை: ஒரகடம் அருகே ஆப்பூரில் நாளை உறுதி முழக்கப் பேரணி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். காஞ்சி மாவட்டமே திக்குமுக்காடும் வகையில் மாநாட்டு திடலே குலுங்கிடும் வகையில் திமுகவினர் மட்டுமல்லாது பொது மக்களும் பெருங்கூட்டமாக ஆப்பூரில் கரம் கோர்த்து எழுச்சியுடன் திரண்டு புதிய சரித்திரம் படைப்போம் வாரீர்! வாரீர்!! என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு 234 தொகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த பயணத்துக்கு நடுவே கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மதுரையில் கேள்வி கேட்கும் பேரணி, கடலூரில் நீதி கேட்கும் பேரணி, திருப்பூரில் விடியல் மீட்பு பேரணி பொதுக்கூட்டம் நடத்தி லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே ஆப்பூரில் நாளை உறுதி முழக்கப் பேரணி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.
மதுரையில் கேள்வி கேட்கும் பேரணி, கடலூரில் நீதி கேட்கும் பேரணி, மதுரையில் விடியல் மீட்பு பேரணி நடத்திய ஸ்டாலின், இப்போது காஞ்சியில் உறுதி முழக்கப் பேரணி நடத்த இருக்கிறார். இதற்காக 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு திறந்தவெளி மேடை மட்டும் 150 அடி அகலம் 60 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் கார்களை நிறுத்த தனியாக 200 ஏக்கர் இடமும், மெயின் ரோட்டுக்கு எதிரே இன்னொரு பகுதியில் மேலும் 200 ஏக்கர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் சுமார் 5 லட்சம் பேர்களை பொதுக்கூட்டத்திற்கு திரட்டி வருகிறார்கள்.
இதில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக 5 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் இன்றியமையா பிரச்சனைகளை முன் வைத்து ‘முடியட்டும் அ.தி.மு.க. ஆட்சி, விடியட்டும் தி.மு.க. ஆட்சி' என்ற உன்னத நோக்கத்துடன் தமிழகத்தில் உள்ள பட்டிதொட்டி எங்கும் சுற்றி சுழன்று நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு 234 தொகுதிகளிலும் வெற்றிகரமாக பயணத்தை முடித்து நிறைவு செய்துள்ளார்.
இப்பயணத்தின் நிறைவாக நாளை ஞாயிறன்று பிற்பகல் 2 மணி அளவில் ஒரகடம் அருகே ஆப்பூரில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா திடலில் ‘உறுதி முழக்கப் பேரணி' மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் எழுச்சியுரையாற்றுகிறார். இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைவரும் திரளாக பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.
பொதுக்கூட்டத்திற்கு வரும் கழகத்தினரும், பொதுமக்களும் பகல் 11 மணிக்கு எல்லாம் தங்கள் ஊர்களில் இருந்து புறப்பட்டு பகல் 1 மணிக்கு பொதுக்கூட்ட திடலுக்கு வந்து அமர்ந்திடும்படி இருகரம் கூப்பி அழைக்கிறேன்.
‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்ற பேரறிஞர் அண்ணாவின் வைர வரிகளுக்கு ஒப்பாக காஞ்சிபுரம் மாவட்டமே திக்குமுக்காடும் வகையில் மாநாட்டு திடலே குலுங்கிடும் வகையில் காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள கழகத்தினரும், பொது மக்களும் பெருங்கூட்டமாக ஆப்பூரில் கரம் கோர்த்து எழுச்சியுடன் திரண்டு புதிய சரித்திரம் படைப்போம் வாரீர்! வாரீர்!! என்று அன்புடன் அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணி, கொடி கம்பங்கள், பேனர்கள், பிரம்மாண்ட எல்.இ.டி. ஸ்கிரீன் அமைக்கும் பணி இரவு-பகலாக தீவிரமாக நடந்து வருகிறது.உறுதி முழக்க பேரணி பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்குகிறார். சுந்தர் முன்னிலை வகிக்கிறார்கள். முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசியதும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசுவார் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications