For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரியை அடக்க 'வெள்ளைக் கொடியுடன்' சுற்றி வரும் ஸ்டாலின்!

By Veera Kumar
|

சென்னை: அண்ணன் அழகிரியின் ஆட்டத்தை அடக்க திமுகவின் அனைத்துத் தரப்பு நிர்வாகிகளையும் நோக்கி தம்பி ஸ்டாலின் வெள்ளைக் கொடியுடன் சுற்றிவருவதால் திமுக தொண்டர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால் கோபத்திலுள்ள அழகிரி நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் கற்றுக்கொடுக்க முடிவு செய்துள்ள திட்டமிட்டுள்ளார்.

தனக்கு ஆதரவாளர்கள் அதிகமுள்ள தென் மாவட்டங்களில் மட்டுமின்றி வடமாவட்டங்களிலும் அழகிரி தனது செல்வாக்கை பெருக்கி வருகிறார். இதற்காக பல மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.

ரஜினியுடன் சந்திப்பு

ரஜினியுடன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து திடீர் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

அழகிரி கணக்கு இதுதான்

அழகிரி கணக்கு இதுதான்

திமுகவில் ஸ்டாலின் கை ஓங்குவதை ஒடுக்க வேண்டுமானால், ஸ்டாலினை முன்னிறுத்தி முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் திமுக படுதோல்வியடைய வேண்டும் என்பது அழகிரியின் கணக்காக உள்ளது.

புரிந்து கொண்ட ஸ்டாலின்

புரிந்து கொண்ட ஸ்டாலின்

இதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின் வெள்ளைக் கொடிக்கு வேலை கொடுத்துள்ளார்.

போன் போட்டு நலம் விசாரிப்பு

போன் போட்டு நலம் விசாரிப்பு

இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு போன்போட்டு நலம் விசாரிக்கிறார்.

எங்கேயோ போகப் போறீங்க பாருங்க

எங்கேயோ போகப் போறீங்க பாருங்க

'தேர்தலுக்கு பிறகு நீங்க எங்கேயோ போகப்போறீங்க' என்ற ரீதியில் அவர்களுக்கு மனதைரியத்தை ஊட்டிவருகிறார்.

அதிருப்தியாளர்களிடம் திடீர் பாசம்

அதிருப்தியாளர்களிடம் திடீர் பாசம்

தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காமல் அதிருப்தியிலுள்ளவர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது அதிருப்தியிலுள்ள இரண்டாம்கட்ட தலைவர்களை தொடர்புகொண்டு 'தேர்தலுக்கு பிறகு உங்கள் குறைகளை பொறுமையாக கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பேன், என்னை நம்புங்கள்' என மனதை மாற்றும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

எதுக்கு வம்பு...

எதுக்கு வம்பு...

கருணாநிதியும், ஸ்டாலினும் ஒரே பக்கத்தில் இருப்பதால் எதற்கு வம்பு அவர்களுக்கே ஆதரவு கரம் நீட்டுவோம் என்று பல நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அழகிரி பக்கம் சற்று ஆட்டம் கண்டுள்ளது.

English summary
In a sudden development Dmk's Stalin started to contact all the district level party leaders and asking them to support him. He advise party cadres that they should not do anything againist the party's wish in the upcoming Loksaba election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X