மு.க. அழகிரியை மீண்டும் சேர்க்க மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா கடும் எதிர்ப்பு!!
சென்னை: மு.க. அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்ப்பது என்ற முடிவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி இருக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவோ இதனை மிகக் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலை முன்வைத்து திமுகவில் தன்னை தலைவர் நிலைக்கு உயர்த்திக் கொள்ள மு.க.ஸ்டாலின் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க படுதீவிரமாக முயன்றார்.
ஆனால் ஸ்டாலினின் இந்த வியூகத்துக்கு மு.க. அழகிரி வேட்டு வைக்கும் வகையில் பேட்டி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மு.க.அழகிரி திமுகவை விட்டே டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனாலும் திமுக லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

சறுக்கிய ஸ்டாலின்
குறிப்பிட்ட சில தொகுதிகளையாவது கைப்பற்றி தனது செல்வாக்கை காப்பாற்ற நினைத்த ஸ்டாலினுக்கு இது பெரும் சறுக்கலாகத்தான் இருந்தது. இதனாலே ஸ்டாலின் தமது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கருணாநிதி இதை ஏற்கவில்லை.

மீண்டும் அழகிரி சேர்ப்பு
இதன் பின்னர் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கும் நடவடிக்கையை கருணாநிதி மகள் செல்வி மேற்கொண்டார். இதற்கு கனிமொழி முழு ஆதரவாக இருந்தார்.

துர்கா எதிர்ப்பு
ஆனால் மு.க. அழகிரி தொடர்பான செல்வியின் தொடக்க நடவடிக்கைக்கே மிக மிக கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காதான். உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? அழகிரி வேண்டுமா? என்று செல்வியிடம் கேட்டு கடுப்படித்திருந்தார் துர்கா.

கருணாநிதி கருத்து
இந்த நிலையில் செல்வி மற்றும் கனிமொழியில் தொடர் முயற்சிகளால் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கலாம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்துள்ளாராம். அதே நேரத்தில் மீண்டும் அழகிரி கலகக் குரல் எழுப்பினால் அது செல்வி மற்றும் கனிமொழியின் பொறுப்புதான் என்று கருணாநிதி கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

துர்கா கோபம்
ஆனால் கருணாநிதி முடிவெடுத்த பின்னரும் அப்படியெல்லாம் அழகிரியை சேர்க்கவே கூடாது.. என்று மிக உக்கிரமான கோபத்தில் சொல்லி இருக்கிறாராம் துர்கா ஸ்டாலின். இப்போது மனைவி சொல்வதை கேட்பதா? அப்பா சொல்வதை கேட்பதா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் 'அடுத்த திமுக தலைவர்' மு.க.ஸ்டாலின்!
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications