For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலினை மாண்புமிகு தமிழக முதல்வர் என அழைக்கும் நாள் தொலைவில் இல்லை: வைகோ நம்பிக்கை

திமுக செயல்தலைவர் ஸ்டாலினை மாண்புமிகு தமிழக முதல்வர் என அழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலினை மாண்புமிகு தமிழக முதல்வர் என அழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ், மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேட்டில் திமுக பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலளார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

ஸ்டாலின் முதல்வராவார்

ஸ்டாலின் முதல்வராவார்

காசிமேட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மாண்புமிகு தமிழக முதல்வர் என அழைக்கும் காலம் விரைவில் வரும் என்று அவர் கூறினார்.

ஆளுநரா? முதல்வரா?

ஆளுநரா? முதல்வரா?

ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார். தமிழகத்தில் இப்போது ஆட்சி செய்வது ஆளுநரா? அல்லது முதல்வரா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் வைகோ கூறினார்.

அனுமதிக்கக்கூடாது

அனுமதிக்கக்கூடாது

பெரியார், அண்ணா வாழந்த பூமியில் மதவாத சக்தியை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆர்.கே.நகர் மக்கள் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டார்.

English summary
Stalin will be the Cheif minister of Tamilnadu soon said MDMK general secretary Vaiko. He was collecting votes for DMK candidate Marudhu ganesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X