மக்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் - ஸ்டாலின்
மக்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் - ஸ்டாலின்
சென்னை: மக்கள் இந்த முடிவை சந்தோஷமாக எடுத்துள்ளார்கள் என்றால் நாங்களும் இதை சந்தோஷமாக எடுத்துக் கொள்கிறோம் என்று லோக்சபா தேர்தல் முடிவு குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு இடத்திலும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவுக்கு ஸ்டாலின் வாழ்த்தினார்.
செய்தியாளர்கள் தேர்தல் முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த தோல்வியை மக்களின் தீர்ப்பாக கருதி ஏற்கிறோம். தேர்தலில் வென்றால் வெறியாட்டம் போடுவதும், தோற்றால் துவள்வதும் திமுகவுக்குப் பழக்கம் இல்லை. வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பிரதமர் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
மக்கள் இந்த முடிவை சந்தோஷமாக எடுத்துள்ளார்கள் என்றால் நாங்களும் இதை ஏற்றுக் கொள்கிறோம். எங்களின் மக்களுக்கான உழைப்பை இன்னும் வலிமைப்படுத்துவோம் என்றார் மு.க.ஸ்டாலின்
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications