Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடத்தப்பட்ட 3வயது குழந்தை மீட்பு- பெண் கைது

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட மூன்றரை வயதுக் குழந்தை மீட்ட போலீசார், குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று தாயுடன் வந்த 3வயது குழந்தை கடத்தப்பட்டார். மாயமான இந்த குழந்தை தற்போது மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவனை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பர்கத்துல்லா. இவரது மூன்றரை வயது மகன் முகமது ஆசிப். இச்சிறுவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்தனர்.

Stanley Hospital Three-year-old missing boy rescue

அங்கு, புறநோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக, குழந்தையுடன் வரிசையில் நின்றனர். அப்போது திடீரென, முகமது ஆசிப்பை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட, பெற்றோர் அவனைத் தேடினர்.

எங்கு தேடியும் காணவில்லை என்பதால், போலீசில் புகார் அளித்தனர். மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சிறுவனை ஒரு பெண் அழைத்துக்கொண்டு போய் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் சிறுவனை மீட்டு, பெண்ணை கைது செய்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான பெண்ணின் முகத்தை சமூக வலைத்தளங்களில் காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து கொடுத்த தகவலின் பேரில் சிறுவன் மீட்கப்பட்டதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் சிறுவன் ஆசிப்பை விழுப்புரத்தில் மீட்டனர். சிறுவனைக் கடத்திய பெண்ணை கைது செய்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான பெண்ணின் முகத்தை சமூக வலைத்தளங்களில் காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிறுவனை மீட்டதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவனை கடத்திய பெண்ணை கைது செய்துள்ளனர்.

சிறுவனை கடத்திய பெண்ணின் பெயர் சுபாஹனி என்பதும் அவர் எண்ணூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவனை கடத்திய சுபாஹனியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+