கரூரில் இன்று மாநாடு! செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரம் வெளியிடும் அண்ணாமலை.. பாஜக நிர்வாகி தகவல்!
கரூர்: கரூர் மாவட்ட பாஜக சார்பில் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று 'மாற்றத்திற்கான மாநாடு' நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். மட்டுமல்லாது 2025ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழாக கொண்டாடப்படுகிறது.
இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்படுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இதே ஆட்சியில் இல்லாமல் இருந்தால் நிச்சயம் இதனை சிறப்பாக கொண்டாட முடியாது என பாஜகவுக்கு தெரியும். எனவே, தங்கள் தாய் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவாவது பாஜக ஆட்சியில் இருக்கவேண்டும் என பாஜகவினர் நினைக்கின்றனர்.

எனவே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது பாஜக. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39+1 என 40 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 9 தொகுதிகளில் எப்படியாவது கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாஜக கடுமையாக உழைத்து வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியான கரூர் மாவட்டத்தில் இன்று 'மாற்றத்திற்கான மாநாடு' நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பாஜகவுக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த மாநாடு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. இது குறித்து பேசிய பாஜக சேலம் கோட்ட பொறுப்பாளரும், மாநில துணை தலைவருமான கே.பி.ராமலிங்கம், "இந்த மாநாட்டில் சுமார் 25 ஆயிரம் பேர் வரை பங்கேற்கின்றனர்.
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கொடுக்கப்பட்ட புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் செந்தில் பாலாஜிக்கு எதிராக, மாநில தலைவர் அண்ணாமலை மேலும் சில ஆதாரங்களை வெளியிடலாம்" என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக திருவள்ளுவர் மைதானத்தில் பாஜகவினர் பந்தல் போட முயன்றபோது, திமுகவினருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில்தான் மாநாடு நடத்தப்படுவதாக பாஜகவினர் கூற, பந்தல் அமைப்பதற்கு அனுமதி கிடையாது என்று திமுகவினர் கூறினர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications