கணவனின் மகளை கொடுமைப்படுத்திய சித்தி மற்றும் அவரது தாய் கைது!
நீலகிரி: நீலகிரியில் தாய் இல்லாத சிறுமியை அடித்து துன்புறுத்திய, சித்தி மற்றும் சித்தியின் தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரபீக் என்பவரின் மகள் ரோஷ்மா என்ற சிறுமி, உடலில் பலமான காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம், நடுவட்டத்தை சேர்ந்த அந்த சிறுமியின் தாய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டதாகவும், அதன் பின் தந்தை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தாயை இழந்த தன்னை, "தந்தையிடம் பேசக்கூடாது, அவரிடம் பணம் கேட்கக்கூடாது" என தந்தையின் இரண்டாம் மனைவி தவுலத், அவரது தாய் ஜான்பேட்டி ஆகிய இருவரும் அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஈரோடு போலீசார் நீலகிரி மாவட்டம், நடுவட்டம் போலீசாருக்கு மாணவியின் வாக்குமூலத்தை அனுப்பி குறிப்பிட்ட இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர்.
இதைதொடர்ந்து, தவுலத், ஜான்பேட்டி ஆகிய இருவர் மீதும் நடுவட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications