ஸ்டெர்லைட் ஆலை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் திடீர் ஆலோசனை
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு திறக்கப்பட இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு திறக்கப்பட இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மக்களின் தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிரித்தது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. இதில் மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி இன்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி அளித்தது.
இறுதி தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கிடையாது.உள்ளே பராமரிப்பு பணிகளை நடத்தலாம். ஆனால் ஆலையை இயக்க கூடாது என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு திறக்கப்பட இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பை அடுத்து முக்கிய முடிவு எடுக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications