50 நாளை தொட்டது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 50-ஆவது நாளை எட்டியது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அந்த ஆலையை நீக்க கோரி அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று 50-ஆவது நாளை எட்டியது.
தூத்துக்குடியில் உள்ளது ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் காப்பர் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையால் விவசாயம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அந்த ஆலையால் தோல் நோய்களும், சுவாச கோளாறுகளும் ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆலையை நீக்க வேண்டும்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரரெட்டியாபுரத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயத்தை அழித்து தொழிற்சாலை வேண்டாம் என்று அந்த தொழிற்சாலை விரிவாக்க பணியை நிறுத்துவதோடு ஆலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி குடியிருப்புகள் இல்லாத பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர்.

பெண்கள், குழந்தைகள் பங்கேற்பு
இந்த போராட்டத்துக்கு வெளிநாடுகளில் வாழ் தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நகரங்களில் இந்த போராட்டம் வலுப்பெற்று வருகின்றனர். வெளிநாடுகளில் நடத்தப்படும் போராட்டங்களில் குழந்தைகள், பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

போராட்டத்துக்கு கமல், ரஜினி ஆதரவு
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் போராட்டத்தை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் என்று புரியவில்லை என்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தமிழக அரசுக்கு கண்டனம் எழுப்பியுள்ளார். அதுபோல் கமல்ஹாசனும் நேரில் சென்று குமரரெட்டியாபுரம் பகுதியில் மக்களுடன் சிறிது நேரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடிவு எப்போது?
நமது கோரிக்கையை மத்திய , மாநில அரசுகள் இன்று நிறைவேற்றும், நாளை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்தபடியே இன்று 50-ஆவது நாளை எட்டியது. ஆனால் விடிவு தான் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications