ஆட்சிக்கு வந்து 3 நாட்கள் கூட ஆகல! திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார் விஜய்? தவெக சறுக்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் 'வெற்றி' முழக்கத்தோடு அரியணை ஏறியிருக்கும் தமிழக வெற்றி கழகம், இப்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. "நாங்க வந்தா எல்லாம் மாறும்" என்று சொன்னவர்கள், இப்போது திமுக ஆட்சியில் நடந்தவற்றையே 'ஸ்டிக்கர்' ஒட்டித் தங்கள் கணக்கில் வரவு வைப்பதாகத் தகிடுதத்தங்கள் கிளம்பியுள்ளன.

விஜய்யின் அரசியல் வருகையைத் தீயாகக் கொண்டாடும் தவெக நண்பா நண்பீஸ், சமூக வலைதளங்களில் செய்யும் அதிரடிப் பிரச்சாரங்கள் பலவும் 'பழைய செய்தியைப் புதியது போலத் திரிக்கும்' வேலையாக இருப்பதாகத் தரவுகள் அலறுகின்றன. அப்படி என்னதான் நடக்கிறது? ஒரு மினி அலசல்!

சேலம் 'பைக் ரோந்து': 2026-ன் ஒரிஜினல் ஸ்கிரிப்ட்!

சேலம் மாநகரக் காவல் துறையினர் இப்போது பைக்கில் ரோந்து செல்வதைப் பார்த்துவிட்டு, "தலைவர் வந்ததும் அதிரடி ஆரம்பம்" என தவெகவினர் 'ரீல்ஸ்' போட்டு வருகின்றனர். ஆனால், கொஞ்சம் பிளாஷ்பேக் சென்று பார்த்தால், கடந்த 2026 ஜனவரி மாதமே அப்போதைய திமுக அரசு இந்தத் திட்டத்தை மிக விரிவாகத் தொடங்கிவிட்டது. குறுகலான வீதிகள், நெரிசல் மிகுந்த சந்தைகளில் குற்றங்களைத் தடுக்க திமுக போட்ட ஸ்கெட்ச் அது. சொந்தமாகப் புதிய ஐடியாக்கள் இல்லாததால், திமுகவின் திட்டத்தைத் தூசு தட்டி எடுத்துத் தங்கள் தலைவரின் சாதனையாகக் காட்டுவது எந்த ஊர் நியாயம்?

Sticker Politics TVK Supporters Under Fire for Claiming DMK Projects as Their Own

டாஸ்மாக் மூடல்: 500 கடைகள் எங்கே?

மதுவிலக்கு என்பது தவெக-வின் பிரதான முழக்கம். "நாங்கள் வந்ததும் மதுக்கடைகளை அகற்ற ஆய்வு நடத்துகிறோம்" என இப்போது ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், 22.06.2023-ல் கொடுத்த வாக்குறுதியின்படி திமுக அரசு ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூடிவிட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த கடைகள் எப்போதோ அகற்றப்பட்டுவிட்டன. ஏற்கனவே திமுக செப்பனிட்ட பாதையில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, இப்போதுதான் முதல்முறையாக ஆய்வே நடப்பது போலக் கதையளப்பது 'பித்தலாட்டம்' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

'முதல் பெண் அமைச்சர்' - வரலாற்றை மறந்த தவெக!

தவெக அமைச்சரவையில் கீர்த்தனா அமைச்சராகப் பொறுப்பேற்றதும், "தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர்" எனத் தவெக ஐடி விங் ஒரு மாயையை உருவாக்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றைத் தப்பித் தவறிக்கூடத் தவெகவினர் புரட்டிப் பார்க்கவில்லை என்பது இதிலேயே தெரிகிறது.

சுப்புலட்சுமி ஜெகதீசன், பாப்பா சுந்தரம் எனப் பெண் அமைச்சர்களின் பட்டியல் நீளம். அதுமட்டுமா, தமிழகத்தையே ஆண்ட ஜெயலலிதாவையே இவர்கள் மறந்துவிட்டார்களா அல்லது மறைக்கப் பார்க்கிறார்களா? பிம்பங்களை உருவாக்க வரலாற்றைத் திரிப்பது ஆபத்தானது என்பதை தவெக உணர வேண்டும்.

வெள்ளை அறிக்கை: பி.டி.ஆர்-க்குத் தெரியாததா?

"அரசின் நிதிநிலை குறித்து இதோ வெள்ளை அறிக்கை விடுகிறோம்" என தவெக மார்தட்டுகிறது. ஆனால், தமிழக அரசியலில் வெள்ளை அறிக்கை என்பது ஒன்றும் எட்டாவது அதிசயம் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சரி, கடந்த திமுக ஆட்சியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் சரி, மிகத் தெளிவான வெள்ளை அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளனர். இதைத் தவெகதான் முதன்முதலில் கண்டுபிடித்தது போலப் பில்டப் கொடுப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

பழைய குட்கா... புதிய நெருப்பு!

சமூக வலைதளங்களில் இப்போது ஒரு வீடியோ வைரலாகிறது. லாரி லாரியாகக் குட்காவை ஏற்றி வந்து கொளுத்துகிறார்கள். "விஜய் ஆட்சியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு" என கேப்ஷன் பறக்கிறது. விசாரணையில் இறங்கினால், அது கடந்த திமுக ஆட்சியில் காவல்துறையால் முறைப்படி பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பழைய வீடியோ என்பது அம்பலமாகியுள்ளது. பழைய காணொளியைத் தூசு தட்டி எடுத்து, இப்போது எரித்தது போலக் காட்டி லைக்ஸ் வாங்கும் 'எடிட்டிங்' அரசியல் எத்தனை நாளைக்குத் தாங்கும்?

அரசியலில் 'மாற்றம்' என்பது வெறும் முக மாற்றமாக மட்டும் இருக்கக் கூடாது, அது செயல்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்தவர் வீட்டுப் பிள்ளைக்குத் தனது பெயரை வைப்பது போல, திமுகவின் திட்டங்களுக்குத் தவெக ஸ்டிக்கர் ஒட்டுவது அந்தப் இயக்கத்திற்கு அழகல்ல. விளம்பர வெளிச்சம் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் கைகொடுக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு மக்கள் மன்றத்தில் 'ஒரிஜினாலிட்டி' மட்டுமே ஜெயிக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+