தூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்கிறது : கனிமொழி
தூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை : தூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் பெண்கள் அச்சத்துடனே இருக்கிறார்கள் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் போலீஸார் பொதுமக்களிடையே வன்முறையை நிகழ்த்தியதாக பல்வேறு அரசியல் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறுகையில், தூத்துக்குடியில் இன்னமும் போலீஸார் வன்முறையை கடைபிடித்து வருகிறார்கள். இன்றும் வீட்டிற்குச் சென்று பெண்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.
இதனால் அங்கு தனி மனித சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இதுபோன்ற அராஜகப்போக்கை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications