"நான் நரேந்திர மோடியின் மகள்.." ஸ்ட்ராபெரி திரைப்பட ஹீரோயின் அவனி மோடி அதிரடி பேட்டி
சென்னை: நான் நரேந்திரமோடியின் மகள் என்று, ஸ்ட்ராபெரி திரைப்பட ஹீரோயின் அவனி மோடி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பா.விஜய் இயக்கத்தில், அவரே ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம் ஸ்ட்ராபெரி. இதன் ஹீரோயின் அவ்னி மோடி, அப்படத்தில் கவர்ச்சியில் பட்டையை கிளப்பியுள்ளாராம்.

அடுத்ததாக காலண்டர் கேர்ள்ஸ் என்ற பெயரில் வெளியாகும் படத்தில் நடித்துக்கொண்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த மாடலான இவரது பெயரையும், பூர்வீகத்தையும் வைத்து நீங்கள் பிரதமர் மோடியின் சொந்தக்காரரா என்று பல பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனால் வெறுத்துப்போன அவனி மோடி, ஹிந்தி பத்திரிகையொன்றுக்கு இதுபற்றி கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் உறவினரா நீங்கள்... என்ற கேள்வி எங்கு சென்றாலும் என்னை சுற்றி வருகிறது. நான் அவரின் உறவுக்காரர் கிடையாது. மோடியின் மகள் நான்.

நான் மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இளம் பெண்கள், மோடியை தங்களின் தந்தை ஸ்தானத்தில்தான் வைத்துள்ளனர். அந்த வகையில் மோடி எனக்கும் தந்தை போன்றவர். மற்றபடி ரத்த உறவு எதுவும் கிடையாது. இவ்வாறு அவனி மோடி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications