திருச்சியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் பலி: ரிசார்ட் உரிமையாளர் உள்பட இருவர் கைது
திருச்சி மாவட்டம், வயலூர் அருகே ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவர் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில் அந்த ஹோட்டல் உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம் வயலூர் அருகே ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவர் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில் அந்த ஹோட்டல் உரிமையாளரும், மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி புறநகர் பகுதியான சோமரசம்பேட்டையை அடுத்துள்ள வயலூரில் சிவபால குரு என்பவர் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இயற்கை எழில் கொஞ்சும், கிராம சூழல் கொண்ட இந்த ஹோட்டலில் செயற்கை நீச்சல் குளமும் உள்ளது.

இந்நிலையில் 7 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் 15 பேர் வரை நீச்சல் அடிக்கலாம். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள மாணவர்கள், இளைஞர்கள், ஹோட்டலில் தங்குவோர் என நீச்சல் குளத்தில் குளித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
இதற்கு பெரியவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் நேற்று இந்த நீச்சல் குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள மகாலட்சுமி நகரைச் சேர்ந்த முஸ்தபா மகன் அபுதாகீர் (12). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சல்மான் (15), நிஜாம் (15) ஆகியோருடன் அந்த நீச்சல் குளத்திற்கு குளிக்க வந்துள்ளார்.
அப்போது அவர்களுக்கான நேரம் முடிந்தவுடன் புறப்படும் நேரத்தில் அபுதாகீரை காணவில்லை என்று தேடினர். இதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் நீச்சல் குளத்தின் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர்.
இந்நிலையில் அபுதாகீர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கூட்டம் நெரிசல் காரணமாகவும், குளத்தில் மேல் இருந்து யாரேனும் குதித்தபோது அபுதாகீர் மீது விழுந்து அவர் மூச்சுதிணறி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. முறையான பாதுகாப்பு அம்சங்களை வழங்காததால்ஓட்டல் உரிமையாளர் சிவ பாலகுரு, மேலாளர் கணேசலிங்கம் ஆகிய இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications