மெரினாவில் நள்ளிரவிலும் குடும்பம் குடும்பாக குவிந்த மக்கள் பேரலை... மிரளும் வங்கக் கடல்!
சென்னை மெரினாவில் நள்ளிரவிலும் இளைஞர்கள் குவிந்தனர். சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் திரளுவதால் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது.
நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர். பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர்.
இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications