கந்தர் சஷ்டி விழாவில் நடனத்தில் கலக்கிய பள்ளி மாணவ மாணவியர்
தேவகோட்டையில் நடந்த கந்தர் சஷ்டி விழாவில், பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
தேவகோட்டை: தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
71 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் மிகப்பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் வரவேற்புரையுடன் துவங்கி பரதநாட்டியம், ஓம் சரவணபவ நடனம், முருகன் அடிமை பேச்சு, செல்ல குழந்தைகள் நடனம், லார்டு முருகா ஆங்கில பேச்சு, மாரியம்மன் கரக நடனம், நம்பிக்கை பேச்சு ஆகியவை இடம் பெற்றன.

மேலும் அலை பேசியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வண்ணம் மௌன நடிப்பு, தி டிஸ் ஹானஸ்ட் ஜட்ஜ் ஆங்கில நாடகம், உழவர் நடனம், யோகம் தரும் யோகா, நிலவுக்கே சென்று வந்தது போன்ற நிலவு நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலான கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவிகள் 6ம் வகுப்பு ராஜி, 7ம் வகுப்பு ஜெனிபர் ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications