மயிலாடுதுறை: பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட 41 பள்ளி மாணவ-மாணவிகள் வாந்தி மயக்கம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் பல்லி விழுந்த இட்லி சாம்பார் சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 41 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தில் தனியார் நர்சரி பிரைமரி பள்ளி உள்ளது. இந்த பள்ளி விடுதி மாணவ, மாணவிகளுக்கு பந்தநல்லூர் அருகே உள்ள சோழிய வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து காலை உணவு வாங்கி கொடுப்பது வழக்கம்.
அதேபோல் இன்று இட்லி வாங்கி கொடுத்தனர். இதனை சாப்பிட்ட 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 41 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் 8 ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக பந்தநல்லூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கணேசமூர்த்தி, ரேணுகா ஆகியோர் மயங்கிய நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டலில் வாங்கி கொடுத்த இட்லியில் பல்லியின் தலையும், வாலும் கிடந்ததாக சாப்பிட்ட மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் தான் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மாணவ - மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications