கூடுதல் பள்ளிக் கட்டணம் என கூப்பாடு போடும் விஜயகாந்த் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்..
மாமண்டூர் : தமிழக பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவ்வப்போது புகார் கூறும் விஜயகாந்துக்கு சொந்தமான கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜயகாந்த் குடும்பத்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி சென்னைக்கு அருகே மாமண்டூர் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அவ்வாறு வசூலிக்கப்படும் தொகைக்கு முறையான ரசீது கொடுப்பதில்லை என்றும் மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து முதலாம் ஆண்டிலேயே முறையிட்டதாகவும், 3 ஆம் ஆண்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதாகவும் தெரிவித்த மாணவர்கள், தற்போது 3 ஆம் ஆண்டில் கேட்டால் கல்விக் கட்டணம் குறைக்கப்படாது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மாணவ-மாணவிகளை கலைந்து போகச் செய்தனர்.
அரசியல் ரீதியாக பள்ளிகளில் கூடுதல் கட்டணத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் விஜயகாந்த் தனது கல்லூரியிலேயே மாணவ-மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முறைதானா?
அது சரி..அரசியல் வேறு..பிசினஸ் வேறு இல்லையா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications