நீட் எதிர்ப்பு: புதுச்சேரி ஆளுநர் மாளிகையையை முற்றுகையிட்ட மாணவர்கள்- வீடியோ

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி புதுச்சேரி மாணவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் உண்டானது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அரியலூர் குழுமூரைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார்.

Students protested against Neet in Puducherry

அதனையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கும் அனிதாவின் மரணத்துக்கு மத்திய அரசுதான் காரணம் எனக் கூறி புதுச்சேரி மாணவர்கள் பல்லாயிரக்காணக்கானவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் ஆளுநர் மாளிகை வட்டாரம் மிகுந்த பதற்றத்துக்குள்ளானது. அதையடுத்து அங்கு போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்களைக் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+