பேரிடர் நிதி தராத மத்திய அரசு.. வானிலை முன்னறிவிப்பு மட்டும் இந்தியிலா? சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளதற்கு சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும்தான் சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது. பல நேரங்களில் ஆங்கிலத்தில் வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு சென்னை வானிலை ஆய்வு மையம் சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறது.
இந்த நிலையில் திடீரென 3-வது மொழியாக இந்தி மொழியிலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்பு அறிக்கையை வெளியிட தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பதாக பெரும் சர்ச்சை, போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை வானிலை மையத்தில் இந்த நடவடிக்கை தற்போது பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத மத்திய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மையத்துக்கு கண்டனம் தெரிவித்து வைகோ வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாநில ஆய்வு மையங்கள் வானிலை முன்னறிவிப்புகளை அந்தந்த மாநிலத்தின் மொழியில் வழங்கும் படி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதே போல், தமிழ்நாட்டிற்கான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழில் வழங்கி வந்தது.
முன்பு இருந்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் வலைத்தளம், முழுவதும் தமிழில் இருக்கும். அதே வேளையில் மற்ற மொழியினர் முன்னறிவிப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கும். தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய வலைத்தளம் முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கிறது.
ஆனால் தமிழில் குறிப்பிட்ட முன்னறிவிப்பு சேவைகள் மட்டுமே உள்ளன. முழுவதுமாக தமிழில் இருந்த வலைத்தளத்தில் தற்போது தமிழ் உள்ள அளவிற்கு இந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வானிலை முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எடுத்துக்காட்டாகும்.
மத்திய பாஜக அரசின் மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க முயற்சிக்கும் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக தமிழ்நாடு எதிர்த்து வரும் நிலையில் இந்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் மூர்க்கத்தனமாக இந்தியை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். சென்னை வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் உள்ள இந்தி மொழியை அறவே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications