பட்டப்பகலில் பெண் எஸ்.ஐ வீட்டு கதவை உடைத்து 110 பவுன் நகை, பணம் கொள்ளை!
சென்னை: சென்னை, திருவல்லிக்கேணியில் பட்டப்பகலில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது வீட்டிலேயே பவுன் கணக்கில் நகைகளும், பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஷ்வரி. இவரது மருமகள் அயனாவரத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐ ஆக உள்ளார். நேற்று மதியம் ராஜேஷ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

12 மணி அளவில் ராஜேஷ்வரி வெளியே சென்றுவிட்டு மதியம் 2.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பதறிப்போன ராஜேஷ்வரி உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 110 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது பற்றி ராஜேஷ்வரி அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications