For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி காந்த் பாஜகவுக்கு வந்தால் எதிர்க்க மாட்டேன்.. கமலை வறுத்தெடுத்த சுப்பிரமணியன் சுவாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி காந்த் பாஜகவுக்கு வந்தால் எதிர்க்க மாட்டேன்.. கமலை வறுத்தெடுத்த சுப்பிரமணியன் சுவாமி - வீடியோ

    சென்னை: ரஜினிகாந்த் பாஜகவிற்கு வந்தால் எதிர்க்க மாட்டேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அதே சமயம் அவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் ரஜினி பாஜகவிற்கு வந்தால் எதிர்க்க மாட்டேன்.

    ஆனால் பழைய சினிமா வசனங்களை பேசினால் எதிர்ப்பேன். இந்து மதத்திற்காக பேசினால் நான் ரஜினியுடன் இருப்பேன்.

    எங்க எங்க "மாஸ்டர்" வரட்டும்.. இருக்கு கச்சேரி.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. !

    பட்ஜெட்

    பட்ஜெட்

    நடிகர் விஜய் வீட்டில் ஐடி சோதனை அநியாயம் நடந்து இருந்தால் வழக்கு தொடரலாம். ராமர் கோவில் கட்டவும், சோனியா காந்தி, சிதம்பரம் ஆகியோரை ஜெயிலில் அனுப்புவதில் தான் பிஸியாக இருக்கிறேன். அதனால் பட்ஜெட் குறித்து இன்னும் படிக்கவில்லை படித்ததும் அதை பற்றி கூறுகிறேன்.

    லாயக்கில்லை

    லாயக்கில்லை

    என் பெயர் சாமி. அதற்காக நான் சாமியார் இல்லை. நான் ஒரு அரசியல்வாதி. தனக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் பலகோடியை கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்றவர்களைப் பிடித்து கொடுப்பதாக கூறினார். கமல்ஹாசன் முட்டாள். அவருக்காக பதில் கொடுக்க லாயக்கில்லை.

    உதவி

    உதவி

    சசிகலா வெளியில் வந்தால் நான் உதவி செய்வேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்திருந்த சுப்பிரமணியன் சுவாமி தற்போது திடீரென பாஜகவுக்கு வந்தால் எதிர்க்க மாட்டேன் என்கிறார். அது போல் அவருக்கு அரசியலே தெரியாது என கூறியிருந்த சுவாமி, தற்போது பாஜகவுக்கு வந்தால் மட்டும் ரஜினிக்கு அரசியல் தெரிந்துவிடும் என நம்புகிறாரா இல்லை பாஜகவில் இணைய அரசியல் ஞானம் தேவையில்லை என கருதுகிறாரா எனத் தெரியவில்லை.

    பாஜக

    பாஜக

    ஆனால் ஒன்று மட்டும் புலப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்காக ரஜினி காந்த் பாஜகவில் இணைக்க வைக்க அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் விரும்புகின்றனர். அது போல் ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியும் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    BJP leader Subramanian Swamy says that if he would have been Finance Minister of India, he will arrest those who got bank loan and escaped to foreign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X