நான் சாதிச்சுட்டேன்.. 'எங்க பரம்பரையில கார் வாங்குன முதல் ஆள்'... ஜி.பி.முத்து உருக்கமான வீடியோ
நெல்லை: இந்த சமுதாயத்தில் எந்த ஒருவரின் முயற்சியையும் கிண்டல் செய்து திட்டுபவர்களே அதிகம். ஆனால் அதை பொருட்படுத்தாமல் போராடுபவர்களே வெற்றி பெறுகிறார்கள். அப்படித்தான் டிக் டாக் புகழ் ஜிபி முத்து வென்றுள்ளார்.
இயல்பான நெல்லை தமிழில் 'டிக்டாக் நண்பர்களே' என்ற வார்த்தையுடன் ரசிகர்களை மகிழ்வித்து வரும் டிக்டாக் ஜிபி முத்து, தன் சம்பாத்தியத்தில் கார் வாங்கி உள்ளதுடன், அதை கண்ணீருடன் உருக்கமாக வீடியா வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்,.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி. முத்து. இவர் தனது ஊரில் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை வாங்கி அதை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.

வைரலான ஜிபி முத்து
இவர் மரக்கடையில் இருந்தபடி பொழுதுபோக்காக டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டார். டிக்டாக் அப்போது தான் மக்கள் மத்தியில் சென்று கொண்டிருந்த நேரம், திடீரென பல்வேறு பாடல்களை அழகாக இன்டிமேட் செய்து இவர் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரலானது. ஜி.பி முத்துவை சிறிய குழந்தைக்கும் தெரியும் அளவுக்கு டிக்டாக் வீடியோக்கள் புகழை கொடுத்தது.

அவமானம்
இதனால் பொழுதுபோக்க டிக் -டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த ஜி.பி முத்து, டிக் டாக்கிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்தார். இதனால் அவர் பல பிரச்சனைகளைச் சந்தித்தார். நிறைய நையாண்டிகளையும், கேலிக்கிண்டலுக்கும் ஆளனார். அவர் எடுத்த சில முடிவுகள் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

யூடியூப் வீடியோ
கஷ்டமான சூழலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தது ஜி.பி முத்துவுக்கு டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை பேரதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து ஜி பி முத்து இன்ஸ்டாகிராம் மற்றும் தனியாக ஆரம்பித்த யூடுயூப் சேனலில் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோக்கள் வைரலாக ஆரம்பித்தது.

பணம் வர ஆரம்பித்தது
யூடுயூப்பில் இவருக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான subscribers சேர்ந்தன. மெல்ல மெல்ல பணமும் வர ஆரம்பித்தது. இப்போது தொலைக்காட்சிகளில் காமெடி ஷோ மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜிபி முத்து வீடியோ
இந்த நிலையில், தற்போது ஜிபி முத்து second handed car ஒன்றை வாங்கியிருக்கிறார்.. இதுகுறித்து வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்என் குடும்பத்தில் கார் வாங்கிய முதல் நபர் நான் தான் என கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார். எத்தனையே அவமானங்கள் மற்றும் கேலிகளை தாண்டி இன்று சாதித்து உள்ளேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications