சென்னையில் காலையில் அனல் காற்று... மாலையில் ஜில் மழை- மாறிய வானிலை
சென்னையின் பல பகுதிகளில் இன்று திடீர் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பிற்பகல் வரை 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் தகித்த நிலையில் திடீர் மழை பெய்து சட்டென்று வானிலையை மாற்றியது.
பகலில் வெப்பம் தகித்த நிலையில் பிற்பகலில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திடீரென திருவல்லிக்கேணி, பாரிமுனை பகுதியில் மழை கொட்டியது.

சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலும், மழை தீவிரமடைந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெய்த மழையால் சற்றே வெப்பம் தணிந்தது.

புறநகர் பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்தது. பெசன்ட் நகர், அடையாறு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சாலைகளில் திடீரென வெள்ள நீர் தேங்கியது.
சட்டென்று மாறிய வானிலையால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர். வெப்பச்சலனத்தால் சென்னையில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications