வாட்டிய வெயிலை விரட்டிய மழை... குளிர்ந்த சென்னை
சென்னை: சென்னையில் நேற்று பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது. மாலையில் தொடங்கி இரவு வரை பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
சென்னையில் கடந்த பத்து தினங்களாவே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் சற்று தணிந்திருந்தது. மாலை 4 மணியளவில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் லேசாக மழை பெய்தது. அதன் பிறகு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது.

மாலை முதலே விட்டு விட்டு பெய்த மழை இரவில் தீவிரமடைந்தது. அடையாறு, பட்டினப்பாக்கம் , மந்தைவெளி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் பகுதியிலும் கனமழை பெய்த காரணத்தால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சில இடங்களில் வெள்ளநீர் குளம்போல தேங்கியது.
கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம், நுங்கம்பாக்கம், நங்கநல்லூர், தாம்பரம், பழவந்தாங்கல், உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. மாலையில் மழை பெய்த போதும் நேற்று பிற்பகலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 39.6 டிகிரியும் மீனம்பாக்கத்தில் 39 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது..
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications