திடீர் பள்ளம்.. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்ததா? திருப்பத்தூரில் பரபரப்பு! என்ன நடந்தது?
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அறிவியல் மைய அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் ராஜி என்பவரின் நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த திருமலை என்பவர் தான் முதலில் பார்த்துள்ளார்.

ஆனால், அது ஏதோ சாதாரண பள்ளம் என நினைத்து கடந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அங்கு இருந்த பள்ளத்தை பார்க்கும்போது அதில் இருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அச்சமடைந்த மக்கள் பள்ளத்தின் முன்பு குவிந்து பார்வையிட்டனர். அந்த மர்ம பள்ளம் ஏற்பட்டது எப்படி எனத் தெரியாமல் குழம்பினர்.
வானில் இருந்து மர்ம பொருள் விழுந்திருக்கலாம் என மக்கள் பீதி அடைந்தனர். வானில் இருந்து ஏலியன்கள் விழுந்திருக்கலாம் என அப்பகுதியில் வதந்திகள் தீயாகப் பரவின. இந்த மர்ம பள்ளம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலறிந்து நேரில் சென்று பார்வையிட்டார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ். மேலும், பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வைக்க கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
அதோடு, தமிழ்நாடு அறிவியல் நொழில்நுட்ப மையத்தின் இயக்குநரிடமும் இதுபற்றி தெரிவித்தார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ். இதையடுத்து, சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல் இயக்குநர் உத்தரவின்படி, வேலூர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையத்தின் மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
மேலும், அந்த 5 அடி பள்ளத்திலிருந்து மண் மற்றும் சாம்பல் மாதிரிகளை சேகரித்தார். பள்ளத்தின் அருகே உள்ள மண் மாதிரிகளையும் சேகரித்தார். இந்த மண் மற்றும் சாம்பல் மாதிரிகளை சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார்.
மேலும், அங்கு விழுந்த மர்ம பொருள் எரிகல்தான். விழுந்த வேகத்தில் மண் சாம்பலாக மாறி உள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே சுற்றி வரும் சிறு கோள்கள் பூமி நோக்கி வரும்போது எரிகல்லாக மாறிவிடும், அதுதான் இங்கு விழுந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications