சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெ. அறிவித்ததே என் தந்தை மரணத்துக்கு காரணம்- தீபா பகீர் குற்றச்சாட்டு
வளர்ப்பு மகனாக சுதாகரனை தேர்வு செய்ததே எங்கள் குடும்பத்திற்கும் அத்தையின் குடும்பத்திற்கும் மிகப்பெரிய விரிசல் ஏற்பட காரணம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கூறியுள்ளார்.
சென்னை: தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன்னுடைய குடும்பத்திற்கும், அத்தை ஜெயலலிதாவின் வீட்டிற்கும் இடையிலான உறவு பற்றி பகிர்ந்து கொண்டார்.
போயஸ் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த நாங்கள் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினோம். ஆனாலும் அத்தை உடன் தொடர்பில்தான் இருந்தோம். 91ம் ஆண்டில் அத்தை முதல்வர் ஆன பின்னரும் உறவு தொடர்ந்தது.

1995ம் ஆண்டில் சுதாகரனை வளர்ப்பு மகனாக தேர்ந்தெடுத்த பிறகுதான் மிகப்பெரிய பிரிவு ஏற்பட்டது. என்னை வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொள்வார் என்று என்னுடைய அப்பா நினைத்தார். அத்தையும் அப்படித்தான் என்னை வளர்த்தார்.
திடீர் என்று வளர்ப்பு மகன் என்று யாரையோ சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுத்தோம். திடீர் திருமணம் தான் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியது. என்னை வளர்ப்பு மகளாக வளர்க்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் ஆசை. நாங்கள் சுதாகரன் திருமணத்தில் பங்கேற்கவில்லை
சுதாகரன் திருமணம் நடந்து ஒரு சில மாதங்களில் அப்பா இறந்து விட்டார். அப்பா இறந்த உடன் உடனடியாக அத்தை வந்து அனைத்து கடமைகளையும் செய்தார்.
என்று தீபா கூறியுள்ளார்.
வளர்ப்பு மகனாக சுதாகரனை தேர்வு செய்யலாம், திருமணம் செய்யலாம் என்றும் கூறியது அவருடன் இருந்தவர்கள்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் தீபா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications