தீபாவளிக்கு வங்கி கணக்கில் பணம்.. கரும்பு விவசாயிகளுக்கு ‘ஸ்வீட் நியூஸ்’! ரூ.603 கோடி வழங்க அரசாணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025-26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ. 603.34 கோடி நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.3290.50வழங்குகிறது. அத்துடன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.709.50 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4,000 விலையாக கிடைக்கும் என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஊக்கத்தொகை வழங்க ரூ. 603.34 கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Sugarcane Farmers to Get 709 50 Per Tonne Incentive TN Govt Releases 603 Crore

அரசாணை வெளியீடு

இது குறித்து வேளாண்மை - உழவர் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றிடும் வண்ணம் தமிழ்நாட்டில், இனிக்கும் கரும்பினை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் காத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் கரும்பிற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றிய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ. 709.50 வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன் வாயிலாக கரும்பு விவசாயிகள், கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.4,000 பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடிப் பரப்பு உயர்ந்து சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மேம்படுவதுடன், சர்க்கரை மற்றும் உப பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்புக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ. 709.50 சிறப்பு ஊக்கத் தொகை தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி 2025-26ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ. 709.50 வழங்குவதற்காக ரூ. 603.34 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கரும்பு டன் ஒன்றிற்கு ரூ. 4,000

தமிழ்நாட்டில் 2025-2026 ஆம் ஆண்டு பருவத்தில் அரவைப்பணி மேற்கொண்டுள்ள 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 29 சர்க்கரை ஆலைகளில் 9.5 சதவீத சர்க்கரைக் கட்டுமானத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ. 3,290.50 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையான ரூ. 709.50 சேர்த்து, டன் ஒன்றிற்கு ரூ. 4,000 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரைக் கட்டுமானம் 9.5 சதவீதத்திற்கு மேல் உள்ள கரும்பிற்கு அதற்கேற்ப ரூ. 4000-க்கும் அதிகமாக கரும்பு விலை கிடைக்கப்பெறும். மேலும், இந்த அரசாணையின்படி, 01.10.2025 முதல் 30.09.2026 வரை சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளின் கரும்பு எடை, ஆதார் எண், வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ஊக்கத்தொகை

மாவட்ட ஆட்சித் தலைவர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்ட பின்னர் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையினால் ஒத்திசைவு செய்யப்பட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடிப் பணப்பரிவர்த்தனை வாயிலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை முதல் தொடங்கப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+