வெளுத்து வாங்கும் கோடைமழை: குற்றால அருவிகளில் வெள்ளம்.. குளிக்கத் தடை!
திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
கோடை காலத்தின் உச்சகட்டமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் ஞாயிறன்று தொடங்கியது. ஆனால், வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. திங்கட்கிழமையும் பல இடங்களில் மழை பெய்தது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் கடுமையாக இல்லை. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக இருந்தது. காலை முதலே பல இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் பலத்த மழையாகவும் பெய்தது.

குற்றால அருவிகளில் தண்ணீர்
நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஞாயிறன்று தென்காசி, குற்றாலம் மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் திங்கட்கிழமை காலை முதல் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகளவில் விழுந்தது.

கோடை விடுமுறை
தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் அதிகரித்து வருகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து, உற்சாகமாக குளித்தனர்.

இடியுடன் மழை
செங்கோட்டை பகுதியில் மாலை 4.15 மணிமுதல் 5 மணிவரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் அம்பை, விக்கிரமசிங்கபுரம், முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

அணைகளுக்கு தண்ணீர்
நேற்று இரவு முதலே மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குண்டாறு நீர்த்தேக்கம், கேரளமாநிலம் பாலருவி, உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலத்தில் வெள்ளம்
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அருவிகளில் பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சீசன் தொடங்கியது?
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். தற்போது கோடைக்காலத்தில்
குற்றாலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது சீசனை பாதிக்குமா, அல்லது மழை நீடிக்குமா போகப்போகத்தான் தெரியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications