"எப்புட்றா".. வெயிலில் எகிறும் கரண்ட் பில்.. "ஏசி" போடாமலேயே ரூமை ஊட்டி போல மாற்றலாம்.. இதை பாருங்க
சென்னை: இந்த கோடை வெயிலின் அனலையும், புழுக்கத்தையும், வெப்பத்தையும், ஏசி இல்லாமலேயே நம்மால் சமாளிக்க முடியுமா? எப்படி?
கோடை வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. இதனால் எந்நேரமும், ஃபேன், ஏசி-யிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.. ஆனால், நடுத்தர மற்றும் வெகுஜன மக்களுக்கு ஏசி என்பது இன்னமும் எட்டாக்கனிதான்.
ஏசி ஏசி: இதனால் ஃபேனிலேயே இருக்க வேண்டி நிலைமை வருகிறது. ஆனால், நம் வீடு வெப்பமாக இருப்பதற்கு முதல் காரணமே இந்த ஃபேன் காற்றுதான்.. காரணம், வெயிலின் தாக்கம் மொட்டை மாடி வழியாக ஃபேனில் இறங்குகிறது.. இதனால் ஃபேன்காற்றும் சூடாகவே இருக்கிறது.. மொட்டை மாடியில் வெப்பம் தணியும்போதுதான், மெல்ல அனலும் தணிகிறது.. ஆனாலும், மொட்டை மாடி அளவுக்கு வீட்டிற்குள் குளிர்ச்சி இருப்பதில்லை.

இதற்கு ஒரே வழி, மொட்டை மாடியில் வெயில் அதிகமாக படுவதை தவிர்க்க வேண்டும்.. சுண்ணாம்பு அல்லது வெள்ளை கலர் பெயிண்ட்டை அடிக்கலாம். ஆனால், ஒயிட் வாஷ் செய்வது தற்காலிக தீர்வுதான்.
தென்னை ஓலைகள்: மாடியிலேயே தென்னை ஓலைகளை கொண்டு பசுமை குடில் அமைக்கலாம்.. ஆனால், அதிக வெயிலுக்கு தென்னை ஓலை தீப்பிடித்துவிடும் என்பதால், அடிக்கடி தண்ணீர் ஊற்றி வரவேண்டும்.. கனமான போர்வைகளை தண்ணீரில் நனைத்து, ஜன்னலில், வாயிற்படிகளில் தொங்க விடலாம்.. இதனால் ஜன்னலின் வெளிப்புறத்தில் ஆவியாதல் நடக்கும். அதாவது, இயற்பியல் விதிப்படி, ஒருபுறம் ஆவியானாலும், மறுபுறம் குளிராவுதலும் நடக்கும். மேலும், சீலிங் பேனுக்கு பதில், ஃடேபிள் பேனை பயன்படுத்தினால், காற்றின் அனல் குறைவாக கிடைக்கும்..
குளிர்ந்த நீர்: சாயங்கால நேரங்களில், படுக்கும் தரையில் நீர் தெளிக்கலாம்.. ஓரிரு முறை தெளித்தால் சூட்டை அதிகமாக கிளப்பிவிடும்.. அதனால், நான்கைந்து முறை, நீர் தெளித்தால், இரவு நேரம் தூங்கும்போது, தரைப்பகுதி ஜில்லென்றிருக்கும்.. அதேபோல, ஒரு அகண்ட பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை போட்டு, தண்ணீரையும் ஊற்றி நிரப்பி, ஃபேனுக்கு கீழ் வைத்துவிட்டால், குளிர்ந்த நீர் பரவும்.. அதேபோல, வெப்பத்தை குறைப்பதற்கான சிறந்த வழி, பகலில் குளிர்ச்சியான நேரத்தில் சமைப்பதாகும்.
வெப்பத்தை அதிகளவு உமிழக்கூடிய மின் சாதனங்களை அதிகளவு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.. முடிந்தவரை வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க எல்இடி விளக்குகளை பயன்படுத்தலாம்.
ஜன்னல்கள்: காற்றோட்டத்தை அதிகப்படுத்த ஜன்னல்களை திறந்து வைத்து வைப்பதுடன், திரைச்சேலைகளையும் இளம் நிறத்தில் போடும்போது கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்... தென்னம் ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிடலாம். இவற்றால் வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும்.

நாம் தினசரி பயன்படுத்தும் மிக்சி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், ஃபேன், அயர்ன்பாக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களின் பிளக்கை பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் அன்பிளக் செய்து வைக்கவும். சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தாலும், சாக்கெட்களில் சொருகியிருக்கும் எந்த பிளக்கும் வெப்பத்தை உருவாக்கவே செய்யும்....வெப்பத்தையும் மின்செலவையும் குறைக்க அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட தரமான மின் சாதனைகளை பயன்படுத்தலாம்..
இதெல்லாம் தற்காலிக தீர்வு என்றாலும், வீட்டை சுற்றி நம் மரக்கன்று நடுதலே நிரந்தர தீர்வாகும்.. சுற்றுப்புறத்தையும் வீட்டையும் குளிர்ச்சியாக வைத்திருக்க இதைவிட இயற்கை கொடையை வேறெந்த செயற்கை பொருட்களும் தந்துவிடாது என்பதே உண்மை..!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications