கோடை விடுமுறை: ஏப்ரல் 7ல் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்
நெல்லை: கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் 7ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு தினமும் வியாபாரம் மற்றும் பணி நிமித்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வழக்கமாக நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழியும்.

இந்த காரணத்தால் விழாக்காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு ரயில் இயக்கப்படும். வரும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி விடுமுறையின் போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு எண் 06001 சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் அடுத்த மாதம் 7ம் தேதி இரவு 8.20 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கோடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நி்ன்று செல்லும். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications