சன் டிவி படங்களை இனி எச்.ஓ.ஓ.க்யூ இணையதளத்தில் காணலாம்
சென்னை: சன் டிவி தன் வசம் வைத்துள்ள ஆயிரக்கணக்கான திரைப்படங்களை ஆன்லைனில் ஒளிபரப்புவது தொடர்பாக பிரபல எச்.ஓ.ஓ.க்யூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் கட்டணம் செலுத்தி சன் டிவியின் எண்ணற்ற திரைப்படங்களை இனி எச்.ஓ.ஓ. க்யூ இணையதளத்தில் பார்த்து ரசிக்கலாம்.

இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய பிரீமியம் வீடியோ ஆன் டிமான்ட் சேவையை எச்.ஓ.ஓ.க்யூ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில்தான் இந்த நிறுவனம் இந்திய சந்தைக்குள் புகுந்தது. இந்த நிறுவனத்திடம் 30,000 மணி நேரம் அளவிலான திரைப்படங்களும், டிவி தொடர்களும் உள்ளன.
தற்போது இந்த வரிசையில் சன் டிவி நெட்வொர்க்கும் இணைந்துள்ளது. சன் டிவியிடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் குறித்து சன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.எல். நாராயணன் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தை முக்கியமாக பார்க்கிறோம். இதன் வரவேற்பைக் காண ஆவலாக உள்ளோம். சன் குழுமத்தின் மிகப் பெரிய திரை நூலகம் மக்களிடம் வெகுவாக சென்றடையும் என்று நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications