தூத்துக்குடியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி... விவசாயிகள் மகிழ்ச்சி
தூத்துக்குடியில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோவில்பட்டி: சூரியகாந்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தூத்துக்குடி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், நாலாட்டின்புதூர், கழுகுமலை, எட்டயபுரம், கயத்தாறு உள்ளிட்ட கிராமங்களில் பருவமழையை நம்பி இப்பகுதி விவசாயிகள் மானாவரி நிலத்தில் கம்பு, சோளம், பருத்தி, மிளகாய், உளுந்து, பாசிபயிறு போன்றவற்றை விதைத்தனர்.

ஆனால் மழை தொடர்ந்து பெய்யாமல் போக்கு காட்டியதாதல் பயிர்கள் வாட தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் பருவமழை பெய்ததால் பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவசாயிகள் மானாவரி நிலங்களில் கடைசி பட்டமாக சூரியகாந்தியை பயிர் செய்தனர். மழை தொடர்ந்து பெய்தததால் சூரியகாந்தி விதைகள் நன்றாக விளைந்துள்ளது.
இதையடுத்து செடிகளுக்கு உரமிட்டு களை பறிக்கும் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். தற்போது சூரியகாந்தி பூக்கள் நன்றாக வளர்ந்து பூத்து குலுங்குகின்றன.
பொதுவாக சூரிய காந்தி பூக்கள் வளர்வதற்கு தொடர்ந்து மழை தேவை. கடந்த சில வாரங்களாக மழை நன்றாக பெய்து கை கொடுத்ததால் சூரியகாந்தி நன்றாக வளர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த சூரியகாந்தியை சில நாட்களில் பறித்து விதையை தனியாக எடுத்து வெளிசந்தையில் விற்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications