சசிகலாவை முதல்வராக்கவா ஓட்டு போட்டோம்? அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு!
சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது ஆதரவாளர்களும் பொதுமக்களும் கடும் கோபத்தில் உள்ளனர். சசிகலாவை முதல்வராக்க ஒப்புதல் தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
சென்னை: சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புதல் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது அவர்களது ஆதரவாளர்களும் பொதுமக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். சசிகலாவை முதல்வராக்க நாங்க ஆதரிக்கவில்லை; அதனால் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்ற முழக்கத்தால் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
ஜெயலலிதாவை முன்னிறுத்தி சட்டசபை தேர்தலை எதிர்கொண்டனர் அதிமுகவினர்... தமிழக மக்களும் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளும் அதிமுகவையே மீண்டும் அரியாசனத்தில் அமரவைத்தனர்.

முதல்வராக ஓபிஎஸ்
ஆனால் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா காலமாகிவிட்டார். இதையடுத்து முதல்வராக நிதி அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அமரவைக்கப்பட்டார். இதை தமிழக மக்களும் வரவேற்றனர்.

முதல்வராக சசிகலா
அதேநேரத்தில் தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக அதிமுவை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் பேராசை பிடித்தவராக மக்கள் விருப்பத்துக்கு எதிராக முதல்வர் பதவியில் உட்காரவும் முடிவு செய்திருக்கிறார் சசிகலா.

ஆதரிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்
சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்துள்ளனர். சசிகலா ஓரிருநாட்களில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

பொதுமக்கள் கொந்தளிப்பு
இந்த நிலையில் சசிகலாவை போய் எப்படி நீங்க ஆதரிக்கலாம்? சரி உங்க கட்சி விவகாரம்னு இருந்தோம்... இப்படி முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கலாமா? என அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் பாய்ச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர். சசிகலாவை முதல்வராக்கத்தான் உங்களுக்கு நாங்கள் ஓட்டு போட்டோமா? எங்க வாக்குகளை வாங்கி சசிகலாவை முதல்வராக்க வேண்டாம்; அதுக்கு ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications