கலவரம் நடத்த திட்டம்..இபிஎஸ் உள்பட அதிமுகவினர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் பரபர புகார்
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 30 பேர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர்
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அண்மையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடத்தினர். இதையடுத்து கொங்கு மண்டலத்திலும் இதேபோன்ற ஒரு மாநாடு நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மேற்கு மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் மாலை எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ, ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அதிமுக கொடிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி நகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அந்த மண்டபத்துக்குள் புகுந்தனர். நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர். இதனால் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போது லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதனால் ஆவேசம் ஆன அதிமுகவினர் மண்டபத்தின் முன்பு எடப்பாடி-சேலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வங்கு வந்த போலீசார், அதிமுக நிர்வாகிகளை குண்டு கட்டாக கைது செய்தனர். இதனிடையே, கூட்டம் முடிவடைந்த பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியே வந்தனர்.
அப்போது அங்கு எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையில் அதிமுகவினர் அங்கு திரண்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த புகழேந்தியை பார்த்ததும் அவரது காரை வேகமாக தட்டினர். மேலும் தகாத வார்த்தைகளையும் பேசினர். எனினும், சுதாரித்துக் கொண்ட புகழேந்தியின் கார் டிரைவர், ஓட்டி சென்றார்.
இதனால் புகழேந்தி நல்விதமாக எந்தவித காயங்களும் ஏற்படாமல் தப்பினார். இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 30 பேர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications