விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசுகளிடம் திட்டம் இல்லாதது ஏன்.. சுப்ரீம் கோர்ட் கேள்வி

விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளன என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகளிடம் என்ன திட்டம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் எந்த திட்டமும் இல்லாதது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

Supreme Court asks government to file farmer suicide details

இயற்கை பேரிடர்கள் மற்றும் வறட்சியின் போது விவசாயிகளை காக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கொள்கை வகுக்காதது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் தற்கொலை உணர்வுபூர்மானது என்று கருத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்த விவரங்களை 4 வாரத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+