ஸ்வீட் நியூஸ் வந்தாச்சு.. உங்க மொபைல் போன் தொலைந்துவிட்டதா.. உதவிக்கு ஓடோடி வந்த மத்திய அரசு.. செம
சென்னை: மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, பொதுமக்கள் நன்மைக்காக பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும், நன்மைகளையும் அவ்வப்போது வெளியிட்டுகொண்டேயிருக்கிறது.. அந்தவகையில், இன்னொரு பயனுள்ள ஏற்பாட்டையும் மத்திய அரசு செய்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் யாருமே இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.. அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மாறி விட்டது செல்போன்கள்.
அந்த போனில் நிறைய போட்டோக்கள், வீடியோக்கள், மேலும் பல முக்கிய தரவுகளை சேமித்து வைத்திருப்போம். அதனால், எந்த நேரமும் பத்திரமாகவே செல்போன்களை கையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

அலர்ட் போன்: நம்முடைய போன் தொலைந்து போய்விட்டால், அந்த செல்போன்களை கண்டுபிடிப்பது சிரமமான விஷயம். இதற்கு கால தாமதம் ஏற்படலாம்... ஆனால் செல்போன் தொலைந்து போனால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிலோ, அல்லது மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலோ புகார் அளிக்கலாம்.. அதேபோல் செல்போன் கடை வைத்திருப்பவர்களிடம், ஒரே நபர் மறுபடியும் மறுபடியும் செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்கும்படி விழிப்புணர்வும் போலீசார் மூலம் தரப்பட்டுள்ளது..
செல்போன்கள் தொலைந்து போனால் 'டிஜி-காப்' என்ற செயலி மூலம் பதிவு செய்து புகார் தெரிவிக்கலாம் என்றும் நம் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தொலைந்து போன உங்களது செல்போனை கண்டுபிடிக்க மத்திய அரசும் உதவ முன்வந்துள்ளது.. தொலைத்தொடர்புத் துறை மத்திய உபகரண அடையாளப் பதிவேடு Central Equipment Identity Register - CEIR) என்ற புதிய வெப்செட்டை இதற்காகவே அறிமுகப்படுத்தி இருக்கிறது.
பயனர்கள்: மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை சார்பில், தொலைந்து போன ஸ்மார்ட் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேஜெட் பொருட்களை கண்டுபிடிக்க இந்த CEIR எனப்படும் மத்திய உபகரண அடையாளப் பதிவேடு என்ற வெப்சைட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் IMEI (சர்வதேச மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி) புகார் தருவதற்கு செல்போன் நம்பர், போன் இன்வாய்ஸ் பில் எண்ணுடன் பயனர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம்.

இப்படி புகார் தருவதன் மூலம், தொலைந்து போனை உங்களுடைய போனை, உடனடியாக பிளாக் செய்ய முடியும்.. இப்படி பிளாக் செய்துவிட்டால், அதற்கு பிறகு செல்போனை யாருமே பயன்படுத்த முடியாது. பிறகு தொலைந்து போன மொபைல் நமக்கு கிடைத்ததும், அதில் தேவையான விவரங்களை உள்ளிட்டு, அன்பிளாக்கும் செய்து கொள்ளலாம்.. அதுமட்டுமல்லாமல், தெலைந்து போன போன் அல்லது திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கும் வசதியும் இதில் இருக்கிறது.
ஓடிபி நம்பர்: உங்களுடைய போன் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள KYM (know your mobile) என்ற செயலி பயனுள்ளதாக இருக்கும்.. MEI நம்பர் உங்கள் போன் பில் பெட்டியில் இருக்கும், அது இல்லை என்றால் உங்கள் போனில் *#06# என டயல் செய்து ஓடிபி பெற்று IMEI நம்பர் பெற்றுக்கொள்ளலாம்.. இந்த CEIR சேவையானது, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது செல்போன் பயனாளிகளுக்கு மிகுந்த நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications