சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் செல்கிறாரா?.. இல்லை என்கிறார் சுதீஷ்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சிகிச்சைக்காக இன்று இரவு சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை சுதீஷ் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. கட்சிகள் தீவிரமாக களப் பணியில் இறங்கியுள்ளன. இருப்பினும் விஜயகாந்த் மட்டும் அமைதியாக வீட்டோடு இருக்கிறார். இந்த நிலையில் அவர் இன்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்வதாகவும்,அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் மகளிர் அணி மாநாட்டின்போது பேசுகையில், விஜயகாந்த்தின் உடல் சுகவீனங்கள் குறித்து விளக்கினார். அவரது தொண்டையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால்தான் அவர் பேசுவது புரியவில்லை என்றும் கூறியிருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் கூட சிங்கப்பூர் போய் வந்தார் விஜயகாந்த்.
இந்த நிலையில் இன்று இரவு அவர் சிங்கப்பூர் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை அவரது மைத்துனர் சுதீஷ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்டுள்ள பதிவு:

தேமுதிக தலைவர் கேப்டன் அவர்களைப் பற்றியும், தேமுதிகவை பற்றியும் அவதூறு செய்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளையும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதுபோன்ற செய்திகளை வெளியிடாமல், உண்மை செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக கேப்டன் அவர்கள் சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற செல்வதாக இன்று வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொண்டு வெளியிட வேண்டுகிறேன். - எல்.கே.சுதீஷ், தேமுதிக இளைஞரணி செயலாளர்
என்று சுதீஷ் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications